ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

திருச்செங்கோடு தாலுகா கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 62). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவிக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் நாமக்கல் முதலைப்பட்டி புதூரில் உள்ளது. இந்த நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் கடந்த 19-ந் தேதி நடேசன் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அரவிந்த் (25) நடேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடேசன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com