தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்
Published on

அரூர்:

அரூர் அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் இருந்து தினமும் பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com