5 பேர் 6 மாதங்கள் நெல்லை மாநகரை விட்டு வெளியேற போலீஸ் கமிஷனர் உத்தரவு

நெல்லை மாநகரைச் சேர்ந்த 5 பேர் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
நெல்லைை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய்
Published on

திருநெல்வேலி,

பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் 5 பேர் 6 மாதங்களுக்கு நெல்லை மாநகர காவல் எல்லைக்குள் இருந்து வெளியேற உத்தரவு.

பொதுமக்களின் உயிர், சொத்துக்களுக்கு ஆபத்து:

திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி டவுண், தொட்டிபாலத் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் கிருஷ்ணமுர்த்தி(எ) முகமது தெளபீக் (வயது 36), கிருஷ்ணமுர்த்தி(எ) முகமது தெளபீக் மனைவி நுார்நிசா(37), மகபூப்ஜான் மனன் பீர்முகம்மது(38), மகபூப் ஜான் மகன் அக்பர்ஷா(34), மற்றும் தச்சநல்லூர், பால்கட்டளை, வடக்கு தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் கார்த்திக்(எ) அலிஷேக்(33) ஆகிய 5 பேர் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததன்.

5 பேர் 6 மாதங்களுக்கு நெல்லை மாநகரில் இருந்து வெளியேற உத்தரவு:

இதனால் அவர்கள் பிரிவு 51-A சென்னை மாநகரக் காவல் சட்டம் 1888-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு நீதிமன்ற வழக்கு விசாரணை, காவல்துறை வழக்கு விசாரணை போன்ற காரணங்களை தவிர 22.6.2026 முதல் 6 மாதங்களுக்கு திருநெல்வேலி மாநகரின் காவல் எல்லைக்குள் இருந்து வெளியேற திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com