நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் நெல்லை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணும் வகையில், அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் கூடுதல், கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று (ஜூன் 7, 2025) நள்ளிரவு 00:00 மணி முதல் ஜூன் 21, 2025 அன்று இரவு 24:00 மணி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






