வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரருக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் - வைரலாகும் வீடியோ

சென்னை ​சேத்துப்பட்டில் வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரரை, காவல் ஆய்வாளர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
Published on

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரரை, காவல் ஆய்வாளர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சகுந்தலா என்பவரை காலி செய்ய செல்லி, வீட்டின் உரிமையாளர் வரலட்சுமி அழுத்தம் கெடுத்ததாக கூறப்படுகிறது. பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், திருமணம் முடித்து வீட்டை காலி செய்வதாக சகுந்தலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போலீஸ் வாகனத்தில் வந்த நபர் ஒருவர், எம்கேபி நகர் காவல்நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் என்றும், 3 நாட்களில் வீட்டை காலி செய்யவில்லை என்றால் நடப்பது வேறு எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com