உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் ஆண் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராம எல்லை பகுதியில் உள்ள கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசா வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com