பணம் தர மறுத்த தொழிலாளிக்கு சரமாரி வெட்டு: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் தொழிலாளி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியபோது, தொழிலாளி பணம் தர மறுத்ததால் அவரை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
பணம் தர மறுத்த தொழிலாளிக்கு சரமாரி வெட்டு: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

சென்னை,

சென்னை புளியந்தோப்பு டோபி கானா ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் கரண் (வயது 21), இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு மேளம் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

அவர் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். கரண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடந்த கரண், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த சாக்லேட்அப்பு. சக்தி, அஜித், கவுதம் உள்ளிட்ட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com