போலீஸ் ஏட்டு மாரடைப்பால் மரணம் - பணியில் இருந்த போது நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்து போலீஸ் ஏட்டு மாரடைப்பால் மரணம் அடைந்து உள்ளார்.
போலீஸ் ஏட்டு மாரடைப்பால் மரணம் - பணியில் இருந்த போது நேர்ந்த சோகம்
Published on

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பில்லூர் குறுக்கு சாலையில் முருகையன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் யாரும் அவரை பார்க்கவில்லை. பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏட்டு முருகையனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகையன் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com