நெல்லையில் முன்பகையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: போலீசார் வழக்குப்பதிவு

நெல்லை டவுணைச் சேர்ந்த ஒருவர் தனது அண்ணன் மகனை, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.
நெல்லையில் முன்பகையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: போலீசார் வழக்குப்பதிவு
Published on

திருநெல்வேலி மாநகரம் டவுண், அடைக்கலமாதா கோவில் தெருவில் வசிக்கும் சண்முகபாண்டியன் மகன் செல்வம் (வயது 40) என்பவரது அண்ணன் மகன் மணிகண்டனை, டவுண் சிவா தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வசூர்யா(19) என்பவருடன் பேசக்கூடாது என்று செல்வம் கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன் பகையின் காரணமாக செல்வசூர்யா மேலும் சிலருடன் சேர்ந்து, செல்வம் என்பவரை அவருடைய வீட்டில் வைத்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, அரிவாளால் கழுத்து மற்றும் கை பகுதிகளில் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இதில் ரத்தக்காயம் ஏற்பட்ட செல்வம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் செல்வசூர்யா(19), மானுர், எட்டாகுளத்தை சேர்ந்த மகாராஜன்(19) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்தை சேர்ந்த கனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com