வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என உதவி ஆய்வாளர் ரூ.200 லஞ்சம் பெற்றார்.
வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல் உதவி ஆய்வாளர் மோகன் ரூ.200 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரனை நடத்திய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ரூ.200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com