ஆவடியில் போலீஸ் ஆயுதக் கண்காட்சி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

காவலர்கள் ஒவ்வொரு ஆயுதத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கினர்.
ஆயுதக் கண்காட்சி
Published on: 

ஆவடி,

ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பயிற்சி மையத்தில், போலீஸ் துறையினர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பழங்கால துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களின் சிறப்புக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ஆயுதங்கள்

இந்த கண்காட்சியில், போலீஸ் துறையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் விஜயந்தா பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்கால மற்றும் நவீன ஆயுதங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்களுக்கு, காவலர்கள் ஒவ்வொரு ஆயுதத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கினர்.

இதனை தொடர்ந்து, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com