அரசியல் என்பது தேர்தலுக்காக மட்டுமல்ல சேவைக்காகவும் தான் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மக்களுக்கு இந்த முகாம் மூலம் நன்றியினை தெரிவித்து கொள்வதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
Published on

மயிலாப்பூர்,

நன்றி

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மயிலாப்பூர் தொகுதில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அந்த தேர்தலில் 33,400 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவிப்பில் கூறியதாவது:-

சுற்று பயணம்

மயிலாப்பூர் என்றவுடன் அது கோவிலும் அதை சார்ந்த இடமுமாகத்தான் இருக்கும் என்றும், இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் சொகுசாக வாழ்பவர்கள் என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இங்குள்ள மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள் ஆவர். தேர்தலின்போது நான் இந்த பகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது மக்களிடம் அடிக்கடி கூறியது என்னவென்றால், 'இங்கு நான் வெறும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் வரவில்லை, உங்களின் நீண்டகால பிரச்சினைகளை கேட்டறிந்து, அவற்றை குறித்துக் கொள்வதற்காகவும் வந்துள்ளேன்.

முத்ரா திட்டம்

நான் வெற்றி பெற்றால் மயிலாப்பூருக்கு பெரிய திட்டம் வைத்திருந்தேன் பக்கிங்காம் கால்வாயினை சுத்தம் செய்து வெள்ள தடுப்பு ஏற்பாடுகளை செய்வது, வீட்டில் ஒருவரையாவது தொழில்முனைவோராக உருவாக்குவது மற்றும் முத்ரா திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க உத்தரவாதம் இன்றி மத்திய அரசு கடன் கொடுக்கிறார்கள் சாலையோர வியாபாரிகளுக்கு முதலில் 15,000 ஆயிரம் கிடைக்கும் அதன் பிறகு 25,000, 50,000 என்று கடன் பெறலாம் முதல் தொகை 15,000 ஆயிரம் ரூபாயை திருப்பி கட்டும் பட்சத்தில் உடனடியாக 25,000. கடன் கிடைக்கும்.

சேவை

தேர்தலில் வெற்றி பெற்றால் தான் சேவை செய்ய வேண்டும் என்றில்லை. அதனால் தான் எனக்கு வாக்களித்தவர்கள் மற்றும் அளிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு கூட்டத்தை கூட்டி நன்றி சொல்லாமல் மக்களுக்கு இந்த முகாம் மூலம் நன்றியினை தெரிவித்து கொள்வதாக கூறினார் அரசியல் என்பது தேர்தலுக்காக மட்டுமல்ல சேவைக்காகவும் தான் என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com