காதல் தோல்வியால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னையில் காதல் தோல்வியால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை பெரியமேடு, நடேசன் தெருவை சேர்ந்தவர் கோமதி (45 வயது). இவருடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். கோமதி தனது ஒரே மகன் முனிசுடன் (17 வயது) தனியாக வசித்து வந்தார். முனிஷ், புளியந்தோப்பில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும், அவர் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

முனிஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல மணி நேரம் செல்போனில் பேசி வந்துள்ளனர். திடீரென காதல் ஜோடிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால், முனிஷ் மன வேதனையுடன் தனியாக சுற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, தாய் கோமதி வீட்டில் இல்லாத நேரத்தில் முனிஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com