

புதுச்சேரி,
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிக்க புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சபை முடிவு செய்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சபையின் தலைவர் பரிச்செய் யாதவ் கூறியதாவது;-
வரும் 23 ஆம் தேதி இந்திய ஜனாதிபதி பங்கேற்கும் புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமேற்பு விழா நடைமுறைகளை ஏற்பாடு செய்ய மாணவர்கள் சபையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிக்க புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சபை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.