பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தை 6 லட்சம் பேர் வாங்க ஆர்வம் காட்டவில்லை

ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்திற்காக ரூ.6687.51 கோடியும், வேட்டி-சேலைக்காக ரூ.668.12 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தை 6 லட்சம் பேர் வாங்க ஆர்வம் காட்டவில்லை
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த (ஜனவரி) மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு மற்றும் வேட்டி, சேலையுடன் ரொக்க பணம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்திற்காக ரூ.6687.51 கோடியும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வாங்க ரூ.248.66 கோடியும், வேட்டி-சேலைக்காக ரூ.668.12 கோடியும் என மொத்தம் ரூ.7,604.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. ஜனவரி 8-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்.

Also Read
மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்கு சந்தைகள் வீழ்ச்சி

பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தை 6 லட்சம் பேர் வாங்க ஆர்வம் காட்டவில்லை

உடனடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கின. போகி பண்டிகையான ஜனவரி 14-ந்தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், பலர் சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட சென்றுவிட்டதால், இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால், பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு, அதாவது ஜனவரி 19-ந்தேதி முதல் விடுபட்டவர்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பையும், ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தையும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சுமார் 6 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com