பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

சுரண்டை பகுதியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவரும், சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான எஸ்.கே.டி.ஜெயபால், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகராட்சி கவுன்சிலர் பரமசிவன், மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் செயலாளர் சேர்மசெல்வம், கூட்டுறவு பண்டக சாலை துணைத்தலைவர் கணேசன், இயக்குனர்கள் சமுத்திரம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com