பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!
Published on

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com