பாலமேடு அருகே ஆதிஜோதி முருகர் கோவிலில் பவுர்ணமி பூஜை

பாலமேடு அருகே ஆதிஜோதி முருகர் கோவிலில்பவுர்ணமி பூஜைகள் நடந்தது.
பாலமேடு அருகே ஆதிஜோதி முருகர் கோவிலில் பவுர்ணமி பூஜை
Published on

அலங்காநல்லூர் 

பாலமேடு அருகே செம்பட்டி கரடு மலை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கு சந்தனம், பால், இளநீர், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com