செல்போனில் ஆபாச படம்: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு

கோப்புப்படம்
5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு 13 வயதில் மகனும் 5 வயதில் மகளும் உள்ளனர். கணவர் பிரிந்து விட்டதால் அந்தப் பெண் மகன் மகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார்.
இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக அந்தப் பெண் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது சிறுமி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகளிடம் கேட்டாலும் பதில் ஒன்னும் சொல்லாமல் இருந்து விட்டார்.
இப்படி தொடர்ந்து நடந்ததால் பயந்து போன இளம்பெண் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இடம் கேட்டுள்ளார். அப்போது சொந்த அண்ணனான 13 வயது சிறுவன் தங்கையை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் சிறுமி தனக்கு நடப்பது என்னவென்று தெரியாததால் அழுவதாக தெரிந்தது.
இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 13 வயது அண்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "சிறுவனிடம் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. இதனால் அவன் சமூக வலைத்தளத்தில் ஆபாச காட்சிகளை மற்றும் பலான படங்களை பார்த்து இந்த செய்கையில் ஈடுபட்டுள்ளான். பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.