

சென்னை,
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளித்து வருகின்றனர். அதேபோல், தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீசாரும் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் 6 ஆயிரம் போலீசாருக்கு தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (31-ந்தேதி) தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டுபோடும் பணி நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.