வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் தபால்காரர்- தக் சேவா விருது கொடுத்து கவுரவம்

அம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் தபால் சேவை செய்து வரும் தபால் அலுவலருக்கு தக் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் தபால்காரர்- தக் சேவா விருது கொடுத்து கவுரவம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 110 வயதுடைய குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த 1 ஆண்டாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை வழங்குவதற்காக, கிறிஸ்து ராஜ என்ற தபால் அலுவலர், அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த 10-ஆம் தேதி, தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு உயரிய விருதான தக் சேவா விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com