பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு முன்பதிவில்லாத ரெயில் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்துக்கான (ஆகஸ்ட்) பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் (8-ந் தேதி) நடைபெறுகிறது. அன்று பகல் 2.52 மணி முதல் மறுநாள் (9-ந்தேதி) பகல் 2.26 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. மேலும், பவுர்ணமி நாளில் வரும் ஆடி வெள்ளி மற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு என்பதால், பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், பக்தர்கள் வசதிக்காக வரும் 9-ந்தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு முன்பதிவில்லாத ரெயில் இயக்கப்படுகிறது. அன்று காலை 9.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரெயில் வழியில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com