கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பல மாநிலங்களின் மின் தேவைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தில் அலகு 2-ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 ஆண்டுகளாக அலகு 1-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com