தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை தெற்குத்தெரு விரிவாக்க பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சுப்பிரமணியம் 6-வது குறுக்குத்தெருவில் உயர் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆதலால் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், சாய்வாக உள்ள மின்கம்பங்களையும் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com