கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கோட்டம் கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1, பகுதி 2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி தானம்பட்டி, கொண்டேப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

சூளகிரி

அதே போல சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com