அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை: இளநிலை என்ஜினீயர் பணியிடை நீக்கம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வினியோகம் தடைபட்டது.
அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை: இளநிலை என்ஜினீயர் பணியிடை நீக்கம்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 14-ந்தேதி சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் தற்காலிகமாக மின்தடை ஏற்பட்டது. சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வினியோகம் தடைபட்டது.

இதையடுத்து, மின்வாரியப் பணியாளர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் மூலம் மின்வினியோகத்தை மீண்டும் வழங்கினர். இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அப்போது, பணியில் இருந்த இளநிலை என்ஜினீயர் வேண்டுமென்றே மின்சுற்றுப் பிரிகலனை இயக்கியதன் காரணமாக மின் வினியோகம் தடைபட்டது என தெரியவந்தது.

இச்செயலில் ஈடுபட்ட இளநிலை என்ஜினீயர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். மின் வாரியத்தின் நற்பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக் கைக்கும் களங்கம் ஏற்படாத வகையில் ஒவ்வொரு பணியாளரும் தங்களது கடமைகளைப் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X