அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு

29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.
அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு
Published on

நாகை,

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், துறை சார்ந்த அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், உடனடியாக எல்.இ.டி திரை வெளிச்சத்தை பயன்படுத்தி ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

உடனடியாக மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்விநியோகம் கொடுக்கப்பட்டது. அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்கு இணையாக தவெகவினருக்கு இருக்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. விதிகளை மீறி அரசு சார்ந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியருக்கு அருகே மாவட்டச் செயலாளர் சுகுமாரனுக்கு இருக்கை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com