இன்று மின் நிறுத்தம்

பேரளம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின் நிறுத்தம்
Published on

நன்னிலம்:

பேரளம், அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெரும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், அதம்பார், விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கட்டாரம், பாவட்டகுடி, கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com