கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இன்று மின்தடை

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் துணை மின் நிலையத்தில் அலகு 1-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று மின் வினியோகம் தடைப்படும்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இன்று மின்தடை
Published on

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 1-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கங்கன்தொட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் சப்ளை இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com