நாளை மின்சாரம் நிறுத்தம்

பெருங்குளம், தொண்டி பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

பனைக்குளம், 

பராமரிப்பு பணி

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் நிறுத்தம்

தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம், கலியநகரி, வட்டானம், எம்.ஆர். பட்டினம், நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், திருவெற்றியூர், தினையத்தூர், குளத்தூர், ஆதியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com