நாளை மின்சாரம் நிறுத்தம்

திருத்தங்கல், ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

சிவகாசி கோட்டத்தில் உள்ள திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட்பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com