நாளை மின் நிறுத்தம்

சங்கராபுரம், புதுப்பட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நாளை மின் நிறுத்தம்
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை)நடைபெற உள்ளது. இதன் காரணமாக சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆனைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை, பாவளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

மேண்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com