10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு - நாளை தொடக்கம்

10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் நாளை தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளன.
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு - நாளை தொடக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் நாளை தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளன. மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில், 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com