தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவில் தணிக்கையியல் பிரிவு, பொது எந்திரவியல் பிரிவு, எலக்ட்ரானிக் பிரிவை சேர்ந்த 109 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனங்களில் 10 நாட்கள் உள்ளுறை பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு செல்லும் மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் வழியனுப்பி வைத்தார். இதில் உதவி தலைமை ஆசிரியர் கோபி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்கவேலு, சாமுண்டீஸ்வரி, சரவணன், மகேஷ், கே.எஸ்.சரவணன், சங்கர் கணேஷ், ஜனனி, அம்பிகா, சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com