சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

நாகை, வேதாரண்யம் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காயாரோகணசாமி கோவிலில் சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதேபோல வேதாரண்யம் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com