நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா- வானதி சீனிவாசன் வாழ்த்து

நாடு முழுவதும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஒரு உந்துதலாகவும் அமைந்துள்ளது.
நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா- வானதி சீனிவாசன் வாழ்த்து
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நார்வே செஸ் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், பிரக்ஞானந்தா சரித்திரம் படைத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

குறிப்பிடத்தக்க சாதனை

உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக அவரது உறுதி, அற்புதமான ஆட்டம் மற்றும் போராடும் குணம் ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. இந்த குறிப்பிடத்தக்க சாதனை இந்திய செஸ் விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகவும், நாடு முழுவதும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஒரு உந்துதலாகவும் அமைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் அவர் மேலும் பல வெற்றிகளையும் தொடர் வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com