

சென்னை,
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி அவர் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நெல்வாய் கூட்டு ரோட்டிலும், மாலை 6 மணிக்கு எண்டத்தூரில் பிரசாரமும், இரவு 7 மணிக்கு எலப்பாக்கத்தில் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு மூலனூர் கிழக்கு ஒன்றியம் நால் ரோட்டிலும் (கருப்பன் வலசு), மாலை 6 மணிக்கு கொளத்துப்பாளையம் பேரூர் கரையூரிலும், இரவு 7.30 மணிக்கு தாராபுரம் மேற்கு ஒன்றியம் அலங்கியத்திலும் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார் என கட்சியின் தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.