பிரேமலதா தாயார் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்


பிரேமலதா தாயார் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாயார் அம்சவேணி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாயார் அம்சவேணி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

உலகில் தாங்க முடியாத இழப்பு ஈன்றெடுத்து, அன்புகாட்டி வளர்த்த அன்னையின் மறைவு தான். அன்னையை இழந்து அத்தகைய பெரும் துயரத்தை எதிர்கொள்ளும் பிரேமலதா விஜயகாந்த், அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story