5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள் - நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களின் பெயர்களை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on: 

சென்னை,

5 தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்கவும் என நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு என 5 சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதிக்காக நேரு, அன்பில் மகேஷ் போன்றோருடனும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டி, பெருந்துறை தொகுதிக்கு முத்துசாமி, கரூர் சட்டமன்ற தொகுதிக்கு செந்தில் பாலாஜி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஆவுடையப்பன் போன்ற நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையின்போது, 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதற்கு கட்சிக்காக உழைத்தவர்களின் பெயர்களையும், தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், கூட்டணிக் கட்சிகள் இன்றி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்றும், அதற்கேற்றவாறு தயாராக வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியகாகவும், கொங்கு மண்டலத்தில் இருக்கும் தொகுதியான பெருந்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com