சென்னை, கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு..?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு..?
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ல் மருத்துவமனையை திறந்துவைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் அவர் ஜூன் 20-ந்தேதி மருத்துவமனையை திறந்துவைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com