பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

பாலியல் புகாரில் சிக்கி, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின.

தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்றோ மீது இளம்பெண் புகார் அளித்தார்.

புகாரையடுத்து பாதிரியார் ஆன்றோ தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோவை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com