பூசாரி தற்கொலை

கொடைரோடு அருகே பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பூசாரி தற்கொலை
Published on

கொடைரோடு அருகே உள்ள கண்ணாப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று கண்ணாப்பட்டியில் உள்ள ஒரு கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அம்மையநாயக்கனூ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com