நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

சென்னை,

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான நிவர் புயல் மரக்காணம்- புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. முன்னதாக இந்த புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பெருமளவில் பொருட்சேதமும், உயிர்சேதமும் தடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பேரிடரால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நிவர் புயல் தாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கினார். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு மற்றும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com