தமிழக முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
தமிழக முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு
Published on

சென்னை,

தமிழகத்தில் ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

மீனவர்கள் பாதிப்பு, சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். சேத விவரங்களை மனுவாக தருமாறும், நிவாரணம் அளிப்பதாகவும் முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் உறுதி அளித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com