

அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் 1௦௦-வது நிகழ்ச்சியை அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி, தா.பழூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அணைக்குடம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.