வாகனம் மோதி தனியார் வங்கி ஊழியர் சாவு

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.
வாகனம் மோதி தனியார் வங்கி ஊழியர் சாவு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாமஸ் நகரை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவருடைய மகன் முனியராஜ் (வயது 24). தனியார் வங்கி ஊழியர். இவர் தனது தாய் குருவம்மாள் (45), தங்கை சாந்தி (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புளியங்குடியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வீரிருப்பு அருகே வரும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முனியராஜ் உயிரிழந்தார். காயம் அடைந்த சாந்தி, குருவம்மாள் ஆகிய இருவரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com