தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம் ஆனார்.
தனியார் நிறுவன ஊழியர் மாயம்
Published on

தோகைமலை அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பழனியப்பன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பழனியப்பன் வந்திருந்தார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனியப்பன் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான பழனியப்பனை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com