பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

கரூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்பரிசு பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையும், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையும், 3-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையும், சிறப்பு பரிசு பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.

இதேபோல் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகதி மாநில அளவில் 2-ம் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.12 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com