

வருகிற மே 2-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற போதும், நடைபெற்று முடிந்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறபோதும், அரசியல் கட்சியினர் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக கூடி நின்று பட்டாசுகள் வெடிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கொரோனா பரவல் அதிகமாவதற்கு காரணமாக அமைந்துவிடும். இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
இந்த தடை உத்தரவை அனைத்து அரசியல் இயக்கத்தினர் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து விதமான கொண்டாட்டங்களையும் நாம் ஒன்று சேர்ந்து தவிர்க்கவேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு செல்லக்கூடிய முகவர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு முறையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.