எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகள்

எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகள்
Published on

எடப்பாடி:-

எடப்பாடி தொகுதியில் ரூ.2 கோடியே 72 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகள் தொடக்க விழா எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர்கள் குப்பம்மாள் மாதேஸ், கரட்டூர் மணி, மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com